இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் தெலுங்கு ப்ரமோஷனுக்கு இயக்குநர் ராஜமவுலி உதவ முன்வந்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துவந்த நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
தெலுங்கு, தமிழில் வெளியாக உள்ள இப்படம் தமிழகத்தில் மட்டும் 350 தியேட்டர்களில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தெலுங்கு ப்ரமோசனுக்காக இயக்குநர் ராஜமவுலியும், தமிழ் ப்ரமோசனுக்காக இயக்குநர் சங்கரும் விழாவிற்கு தலைமையேற்க உள்ளதாக கூறப்படுகிறது.