Khan Trio Aamirkhan, Salmankhan, Shahrukh Khan
சினிமா

ஷாரூக்கான், ஆமீர்கான், சல்மான்கான் இணைந்து நடிக்கிறார்களா? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!|Khan Trio

ஆமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட மூன்று கான்களும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்ட போது "நாங்கள் மூவரும் இணைந்து நடிப்பதற்கான கதையை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது" என்றார்.

Johnson

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் ஷாரூக்கான், ஆமீர்கான், சல்மான் கான். இம்மூவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் பல ஆண்டுகால கனவு. இன்று காலையில் இருந்து சமூக வலைதளத்தில் சுற்றி வரும் வீடியோ ஒன்று, இம்மூவரின் பெயருடன் இருக்கும் கேரவேன்கள் ஒரே படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றது. உடனே இது என்ன படத்திற்காக இருக்கும் என பேச்சுகள் எழுந்தன.

மேலும் ஆமீர்கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூட மூன்று கான்களும் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்ட போது "நாங்கள் மூவரும் இணைந்து நடிப்பதற்கான கதையை கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. ஒருவேளை அப்படி ஒரு படம் அமைந்தால், அந்தப் படத்தின் வெற்றி தோல்வி என்பதை எல்லாம் தாண்டி, எங்கள் மூவருக்கும் அது மிக சந்தோஷமான ஒரு அனுபவமாக அமையும் என்பது மட்டும் உறுதி" என்றார்.

சரி இப்போது வைரலாக அந்த வீடியோவுக்கு வருவோம். அந்த வீடியோ ஷாரூக்கானின் மகன் ஆர்யன் இயக்கிவரும் `Bad***s of Bollywood' படப்பிடிப்பு நடந்த போது எடுக்கப்பட்டது என சொல்லப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸுக்காக தயாராகும் இந்த சீரிஸின் தயாரிப்பாளர் ஷாரூக் தான். மேலும் சீரிஸில் ஷாரூக் கானாகவே வருவதோடு சேர்த்து கதையை நரேட் செய்வது அவர் தான். இந்த சீரிஸின் டீசரில் சல்மான் கான் இடம்பெற்றிருந்தார். இப்போது இதில் அமீர்கானும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் மூன்று கானும் இணைந்து திரையில் தோன்றுவார்களா என ஆவலோடு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Series

இவர்கள் தவிர ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், சைஃப் அலிகான், அலியா பட், கரண் ஜோகர், ராஜமௌலி, திஷா பதானி, க்ரித்தி சனோன் ஷில்பா ஷெட்டி எனப் பலரும் இந்த `Bad***s of Bollywood' கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் செப்டம்பர் 18 வெளியாகவுள்ளது.