பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக்கானின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சமூக வலைத் தளங்களில் அதிக ஆர்வம் கொண்டவரான ஷாரூக், தனது ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அவரது பக்கத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சமூக வலைத்தள விரும்பிகள் பலரும் பின்தொடர்வதால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கையில் அமிதாப்பச்சனின் 2 கோடியே 90 லட்சத்தை ஷாரூக்கான் இன்னும் எட்டிப் பிடிக்கவில்லை.