சினிமா

விராட் - அனுஷ்கா ஜோடியுடன் நடனமாடிய ஷாரூக் கான்

விராட் - அனுஷ்கா ஜோடியுடன் நடனமாடிய ஷாரூக் கான்

rajakannan

பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடியுடன் நடனமாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் தர்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, மும்பையில் உள்ள செயிண்ட் ரெஹிஸ் ஹோட்டலில் மற்றொரு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், கேத்ரினா கைஃப், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அதேபோல், சச்சின், தோனி, ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்களும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் ஷாரூக் கான் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவரது பார்வையும் விராட் - அனுஷ்கா தம்பதிகள் மீது ஷாரூக் கான் திருப்பினார். நிகழ்ச்சி மேடையில் ஷாரூக் கான் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடியுடன் ‘தில் சே’ படத்தில் இருந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். புது தம்பதிகளும் ஷாரூக் உடன் உற்சாகமாக ஆடினர்.

இதனைப்பார்த்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். ஷாரூக் கான் தனது பேச்சின் மூலம் பயங்கரமாக ஜோக் அடித்து தம்பதியையும், விருந்தினரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். தன்னுடைய ஜாலியான நடவடிக்கையால் எல்லோர் மனதையும் ஷாரூக் கவர்ந்துவிட்டார் என்று பலரும் கூறினர். முன்னதாக அனுஷ்கா, விராட் கைகளில் ஷாரூக் கான் முத்தமிட்டார். ஷாரூக் கானைப் போல் பலரும் பல விதங்களில் விராட் - அனுஷ்கா ஜோடியை மகிழ்வித்தனர்.