பிரபல முன்னணி நடிகர்கள் அவ்வப்போது ரசிகர்களை உற்சாகப்படுத்த கேள்வி பதில் நிகழ்வை தங்கள் சமூக ஊடங்களில் அறிவிப்பதை தற்போது ட்ரெண்டில் வைத்திருக்கின்றனர். அந்த வரிசையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில், தன்னிடம் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என அறிவித்திருந்தார். அவரிடம் சினிமா, பொதுஅறிவு, தத்துவங்கள் மற்றும் ஐபிஎல் மேட்ச் மற்றும் கொல்கத்தா அணிகள் குறித்த பல கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்தனர்.
அதில் ஒரு ரசிகர், ’’பிரபலமாகாத உங்கள் நண்பர்களுடம் டின்னருக்கு சென்றால், இன்றும் பில்லை பிரித்து செலுத்துவீர்களா அல்லது நீங்களே செலுத்திவிடுவீர்களா?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு ஷாருக்கான் கூறிய பதில், சமூக ஊடகங்களில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
’’பிரபலமாக இருப்பது இதில் சம்பந்தமில்லாதது. ஆனால் அவர்கள்தான் பில்லை செலுத்துவார்கள். நான் பணம் எடுத்துச்செல்வதில்லை’’ என்று கூறியுள்ளார். மேலும் தனது 55வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள அவர், வீட்டின்முன்பு ரசிகர்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.