சினிமா

"பாலியல் கொடுமை எனக்கு நடக்கவில்லை: நண்பர்களின் பதிவை ஷேர் செய்திருந்தேன்" – கெளரி கிஷன்

sharpana

”நான் படிக்கும்போது எந்த விதமான பாலியல் கொடுமைகளையும் அனுபவித்ததில்லை. நண்பர்கள் அனுபவித்த அதிகார துஷ்பிரயேக கொடுமைகள் குறித்துதான் ட்விட்டரில் ஷேர் செய்திருந்தேன். ஆனால், அது பிஎஸ்பிபி பள்ளிபோல் எனக்கு நடந்ததாக பல ஊடகங்களில் தவறாக செய்தி வெளியாகி விட்டது” என்று வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை கெளரி கிஷன்.

பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியரால் மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடூர குற்றச்சாட்டுக் குறித்து நடிகை கெளரி கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நண்பர்களின் பல பதிவுகளை ஷேர் செய்திருந்தார். அதில் ஒரு பதிவில், ”பள்ளிக்காலங்களில் என்னைப் போன்று பல மாணவர்கள் இது போன்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களால் வேதனை அடைந்தனர். பள்ளிகள் உங்களை வளர்த்தெடுக்கும் தளமாக இருக்க வேண்டுமே தவிர நீங்கள் முத்திரை குத்தப்படிவீர்களோ என்ற பயத்தை விதைக்க கூடாது.

அண்மையில் பிஎஸ்பிபி பள்ளியில் மாணவர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், தவறாக பேசுவது, சாதிக்கொடுமை, உடலை வைத்து அசிங்கப்படுத்துவது, ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்கள் மீது பழிசுமத்துவதும் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நண்பர்களின் பதிவுகளை ஷேர் செய்தது தவறாக புறிந்துகொள்ளப்பட்டு நடிகை கெளரி கிஷனுக்குத்தான் பாலியல் கொடுமை நடந்துவிட்டது என்று பல ஊடகங்களில் செய்தி தவறாக வந்துவிட்டது.

இதனை வேதனையுடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை தவறாக இணைக்கிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று வேதனையுடனும் கோபத்துடனும் பதிவிட்டுள்ளார்.