சினிமா

இந்தி நடிகர் ஜீதேந்திரா மீது பாலியல் புகார்!

இந்தி நடிகர் ஜீதேந்திரா மீது பாலியல் புகார்!

webteam

இந்தி நடிகர் ஜீதேந்திரா, 47 வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்று அவரது உறவுக்கார பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் ஜீதேந்திரா. மூத்த நடிகரான இவருக்கு இப்போது 75 வயதாகிறது. இவர் மீது பெண் ஒருவர் இமாச்சல பிரதேச போலீசில் புகார் அளித்துள்ளார். ஜீதேந்திராவின் உறவுக்கார பெண் என்று கூறியுள்ள அவர், ‘1971-ம் ஆண்டு சிம்லாவில் படப்பிடிப்பில் இருந்த ஜீதேந்திரா, தன்னை அங்கு அழைத்தார். அப்போது அவருக்கு வயது 28, எனக்கு 18. சென்றேன். மது போதையில் இருந்த அவர்  என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார்’ என்று கூறியுள்ளார். 

இமாச்சலப் பிரதேச போலீஸூக்கு வந்துள்ள இந்த புகாரை, ஜீதேந்திராவின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். இது அடிப்படை ஆதாரமற்றது என்றும் கற்பனையாக ஜோடிக்கப்பட்ட, கேலிக்குரிய புகார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.