சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் வெளியிடயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லுக்கு துட்டு படத்திற்கு பிறகு இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சர்வர் சுந்தரம். ஏவிஎம் தயாரிப்பில் அறுபதுகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய போக்கை உருவாக்கிய படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் நடிப்பில் வெளியான இப்படத்தை சந்தானத்தை நாயகனாக வைத்து ரீமேக் செய்து வருகிறார்கள். படத்தின் படபிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இதன் டீஸரை வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடிகர் சிலம்பரசன் வெளியிடயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டீஸர் வெளியிடப்படும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாள் தினமாகும். சிம்பு பிறந்தநாள் அன்று சர்வர் சுந்தரம் படத்தின் டீஸரை சிம்பு வெளியிடுவதால் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.