சினிமா

’ஒரு கதாபாத்திரத்திற்காக ஆயிரம் பக்கங்களை எழுதித்தள்ளுகிறேன்’ – செல்வராகவன்!

sharpana

கதை எழுதும்போது ஏற்படும் அனுபவங்களை இயக்குநர் செல்வராகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு உண்மையில் இயக்குநர் செல்வராகவனுக்கு சிறப்பான ஆண்டாகவே மாறிவருகிறது. பல்வேறு படம் குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வந்து கொண்டிரு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ள செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடித்து வருகிறார். அதோடு, தனுஷின் பெயரிடப்பட்டாத படத்தையும் இயக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்க அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். டீசர் பொங்கல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, கடந்த புத்தாண்டு அன்று ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பையும் தனுஷ் நடிப்பில் அறிவித்திருந்தார். அவரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.  மீண்டும் பிஸியானதால் அவரது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளளோடு காத்திருக்கிறார்கள். அவரது கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் இப்போதும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவை. குறிப்பாக, ‘புதுப்பேட்டை’ கொக்கி குமாரை யாராலும் மறக்க முடியாது. அப்படி ரசிகர்களின் மனதில் கொக்கிப்போடு அழுத்தமாக பதிந்திருக்கிறார் செல்வராகவன்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில்   “நீங்கள் எழுதும் போது, உங்கள் கதாபாத்திரங்களாக மாறுவது தவிர்க்க முடியாதது. நிறைய முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் தேவை. நான் அங்கு செல்ல 1000 பக்கங்களை மீண்டும் மீண்டும் எழுதுகிறேன். ஆம். எழுதுவது மிகவும் கடினமானது. மகேஷ், வினோத், கதிர், கொக்கி குமார், கணேஷ் , முத்து, கார்த்திக் சுவாமிநாதன்” என்று குறிப்பிட்டுள்ளார்.