சினிமா

‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு

‘செக்கச்சிவந்த வானம்’ வெளியாகும் தேதி அறிவிப்பு

webteam

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்கச்சிவந்த வானம்' வெளியாகும் தேதியை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. 

'காற்று வெளியிடை' படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் திரைப்படம், 'செக்கச்சிவந்த வானம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜோதிகா, இந்தி நடிகை அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லைகா நிறுவனம்.  ‘செக்கச்சிவந்த வானம்’ வருகிற  செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.