சினிமா

“ 96 படத்தை இளையராஜா பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார்”- இயக்குநர் சீனு ராமசாமி

Rasus

‘96’ படத்தை இளையராஜா பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இளையராஜாவின் பேச்சு கடும் சர்ச்சைக்குரியதாக மாறியது. ‘96’ படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இளையராஜா, “ 80களில், 90களில் இடம்பெறும் பாடல் என்றால் ஏன்  நான் இசையமைத்த பாடல்களை வைக்கவேண்டும்?. அந்தப்படத்தின் இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு ஏற்றார்போல ஒரு பாடலை இசையமைக்க வேண்டியதுதானே? இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத தனம்’’ எனச் சாடினார். இளையராஜாவின் இந்த பேச்சுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கவே சிலர் ஆதரவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ‘96’ படத்தை இளையராஜா பார்த்திருந்தால் வாழ்த்திருப்பார் என பிரபல இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீனு ராமசாமி, “ 80,90 காலகட்டங்களின் வரலாற்று கதைகளை இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்கள் இல்லாமல் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் வரலாற்றில் நினைவாக அவர் பாடல்கள் இருப்பது யாரும் மறுக்க முடியாது 96 படத்தை அவர் பார்த்திருந்தால் வாழ்த்தியிருப்பார்” என பதிவிட்டுள்ளார்.