சினிமா

திலீப்பை சேர்ப்பதா, வேண்டாமா? ’அம்மா’வில் ரகசிய வாக்கெடுப்பு!

திலீப்பை சேர்ப்பதா, வேண்டாமா? ’அம்மா’வில் ரகசிய வாக்கெடுப்பு!

webteam

மலையாள நடிகர் சங்கத்தில், நடிகர் திலீப்பை சேர்ப்பதற்கு ரசிகய வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், பிரபல நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதனால் கேரள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்கப்பட்டார். 85 நாள்கள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளி யே வந்த திலீப் மீண்டும் 'அம்மா' அமைப்பில் சேர்க்கப்பட்டார். சங்கத்தின் தலைவரான மோகன்லாலின் இந்த முடிவுக்கு நடிகர், நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய நடிகர் மோகன்லால், பாதிக்கப்பட்ட நடிகையின் பக்கமே சங்கம் இருப்பதாகச் சொன்னார். இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகக் கூறிய அவர், நடிகர் சங்கத்தில் இருந்து விலகியிருக்க திலீப் விரும்புவதாக வும், நிரபராதி என வழக்கில் அவர் நிரூபிக்கும் வரை விலகியே இருப்பார் என்றும் தெரிவித்தார். நடிகர் திலீப் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகைகள் சிலர் சங்கத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து மோகன்லால் இந்த விளக்கத்தை அளித்தார்.

இந்நிலையில் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க நடிகர், நடிகைகளிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. மலையாள நடிகர் சங்க மான ‘அம்மா’. இதுபற்றி, திலீப்பை கடுமையாக எதிர்க்கும் ரேவதி, பத்மப்பிரியா, பார்வதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது திலீப்பை நீதிமன்றம், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை, அதனால் சங்கத்தில் அவரை சேர்ப்பதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று கேட் டனர். இதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர் அவரை சேர்ப்பது குறித்து நடிகர், நடிகைகளிடம் வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இப்படி வெளிப் படையாக வாக்கெட்டுப்பு நடத்தினால் நடிகர், நடிகைகள் மிரட்டப்படலாம் என்றும் சிலர் வாக்களிக்க தயங்கலாம் என்று சிலர் கூறினர். இதனா ல் ரகசியமாக வாக்கெடுப்பு நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டம் நடக்கும்போது இந்த ரகசிய வாக்கெடுப்பை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.