பாலிவுட் நட்சத்திர தம்பதிகளாக கரீனா கபூர், சயிப் அலிகான் ஜோடியினர் தங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு சயிப் அலிகானும் நடிகை கரீனா கபூரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற 3 வயதில் மகன் இருக்கும் நிலையில், தற்போது மீண்டும் கரீனா கபூர் கருவுற்றிருப்பதாக அவரது கணவர் சயிப் அலிகான் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
“நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கூடுதலாக குழந்தையின் வரவை எதிர்பார்க்கிறோம். இதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் நலன் விரும்பிகளுக்கு நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார் சயிப் அலிகான். இந்நிலையில் கரீனா கபூரின் தந்தை ரந்தீர் கபூர் “இது உண்மை என்று நம்புகிறேன். அப்படி உண்மையாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.