சினிமா

’பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்!

’பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்!

webteam

‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் மீண்டும் இன்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தணிக்கை குழு  படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கி அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த படம் 25 ஆம் தேதி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய பா.ஜ. ஆளும் 4 மாநிலங்கள் ‘பத்மாவத்’ படத்துக்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்கி இருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் எனவும் படத்தை வெளியிட வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் தடை விதிக்க கோரிய மனுவை, நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.