சினிமா

விஜய் படத்தில் நடிக்கிறேனா? சாயிஷா மறுப்பு

விஜய் படத்தில் நடிக்கிறேனா? சாயிஷா மறுப்பு

webteam

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்காக, தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் திலிப் குமாரின் பேத்தி சாயிஷா. இவர், இந்தியில் அஜய்தேவ்கனின் ’ஷிவாய்’ படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழுக்கு வந்த அவர் ’வனமகன்’ படத்தில் நடித்தார். இப்போது விஜய் சேதுபதியின் ’ஜூங்கா’, கார்த்தியின் ’கடைகுட்டி சிங்கம்’, ஆர்யாவின் ’கஜினிகாந்த்’ படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இதை சாயிஷா மறுத்துள்ளார். விஜய்யுடன் நடிக்க தான் ஆவலாக இருப்பதாகவும் ஆனால், அந்தப் படத்துக்காக யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தற்போது கொல்கத்தாவில் இதன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.