சினிமா

விஜய் சேதுபதி ஜோடியானார் சாயிஷா

விஜய் சேதுபதி ஜோடியானார் சாயிஷா

webteam

விஜய் சேதுபதி ஜோடியாக இந்தி நடிகை சாயிஷா நடிக்கிறார்.

கருப்பன், 96, அநீதி கதைகள், சீதக்காதி படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, அடுத்து கோகுல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு தாதா கேரக்டர். அவர் ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தனர். இப்போது சாயிஷா நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தி நடிகையான சாயிஷா, பிரபல நடிகர் திலீப் குமாரின் பேத்தி. 
தமிழில் ’வனமகன்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பிரபுதேவா இயக்கும் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார். 
கோகுல் இயக்கும் இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் பாரிஸ் நகரில் நடிக்கிறது. சாயிஷா அங்கு பிறந்து வளர்ந்த பெண் கேரக்டரில் நடிக்கிறார்.