சினிமா

லண்டனில் ‘கட்டப்பா’ சத்யராஜூக்கு மெழுகில் சிலை

லண்டனில் ‘கட்டப்பா’ சத்யராஜூக்கு மெழுகில் சிலை

webteam

பாகுபலி படத்தில் நடித்ததின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிய நடிகர் சத்யராஜூக்கு லண்டனில் மெழுகு சிலை வைத்துள்ளனர். 

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘பாகுபலி’. இந்தப் படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. மேலும் இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் ராஜ விசுவாசியாக ‘கட்டப்பா’ எனும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்து சத்யராஜ் இருந்திருந்தார். இந்தப் பாத்திரம் அவருக்கு அசைக்க முடியாத புகழை உருவாகி தந்தது. ‘கட்டப்பா பாகுபலியை கொன்றது ஏன்?’ என்று விளம்பரப்படுத்தும் அளவுக்கு அந்தக் கதாப்பாத்திரம் காத்திரமாக அமைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்தான் அவருக்கு மற்றொரு பெருமை தேடி தந்துள்ளது லண்டனில் உள்ள Madame Tussauds மியூசியம். அங்கு ‘பாகுபலி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டப்பா’ தோற்றத்திலுள்ள சத்யராஜூக்கு மெழுகில் சிலை வைத்து கௌரவப்படுத்தியுள்ளனர்.  இதுவரை பாலிவுட் நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்த இந்தக் கெளரவம் முதன்முறையாக ஒரு தமிழ் நடிகருக்கு கிடைத்துள்ளது. ஆகவே தமிழ் ரசிகர்களும், பாகுபலி படகுழுவினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.