சினிமா

சர்க்காரின் '' ஒரு விரல் புரட்சி'' பாடல் இன்று மாலை வெளியீடு !

சர்க்காரின் '' ஒரு விரல் புரட்சி'' பாடல் இன்று மாலை வெளியீடு !

webteam

நடிகர் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2ம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியானது. நடிகர் விஜயின் புதிய போஸ்டர் ஒன்றும் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சர்க்கார் படத்தின் சிமிட்டாங்காரன் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் அந்த பாடலை யூ டியூப்பில் 13மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் மற்றொரு பாடலான '' ஒரு விரல் புரட்சி'' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பாடலின் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாடலாசிரியர் விவேக்

''நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம் 
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களைத் தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்
என்ற வரிகளையும் பகிர்ந்துள்ளார்''