சினிமா

இந்திய அளவில் ‘சர்கார்’ வசூல் சாதனை

இந்திய அளவில் ‘சர்கார்’ வசூல் சாதனை

webteam

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது.

நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ திரைப்படம் கதை தொடர்பான பல சர்ச்சைகளுக்கு பின்னர் நேற்று தீபாவளி அன்று திரைக்கு வந்தது. 3000 திரைகளில் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம் முதல் நாளில் மட்டுமே சுமார் ரூ.70 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.2.37 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களில் சென்னையில் அதிக வசூல் செய்த படம் இதுதான். தமிழக அளவிலும் முதல் நாளில் ரூ.34 கோடி வசூல் செய்த படம் ‘சர்கார்’ தான். 

2018ஆம் ஆண்டில் இந்திய அளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படமாக, ரூ.35 கோடி வசூல் செய்த நடிகர் ரன்வீன் கபூரின் ‘சஞ்சு’ திரைப்படம் இருந்தது. இந்தச் சாதனையை தற்போது ‘சர்கார்’ உடைத்துள்ளது. இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையையும் ‘சர்கார்’ படைத்துள்ளது.