சினிமா

15 வருடத்துக்கு பிறகு சரத்தும் நெப்போலியனும்!

15 வருடத்துக்கு பிறகு சரத்தும் நெப்போலியனும்!

Rasus

சரத்குமாரும் நெப்போலியனும் இணைந்து நடத்த காமெடி படம், ‘தென்காசிபட்டினம்’. 

15 வருடத்துக்கு முன் வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு ’சென்னையில் ஒரு நாள்-2’ படத்தில் இரண்டு பேரும் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் முனீஸ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் ராம் மோகன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஜெபிஆர் இயக்குகிறார். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். நெப்போலியனும் சுகாசினியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பரபரப்பான த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.