இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் 6வது முறையாக இணைந்து பணியாற்ற இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
கார்த்தி- அதிதிராவ் நடித்த காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் ஒரு படத்தை தயாரித்து இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் நடிகர்கள்- நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இந்தப்படத்தில் சந்தோஷ் சிவன் இணைவதன் மூலம் ஆறாவது முறையாக இவருடன் பணியாற்ற உள்ளார் மணிரத்னம். முன்னதாக தளபதி, ரோஜா, இருவர், உயிரே, ராவணன் ஆகிய மணிரத்னம் இயக்கிய ஐந்து படங்களுக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஸ்பைடர் படத்தில் சந்தோஷ் சிவன் தற்போது பணியாற்றி வருகிறார்.