சினிமா

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம்: இதுல அது கிடையாதாம்!

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம்: இதுல அது கிடையாதாம்!

Rasus

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, விஎஸ்ஓபி, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ்.எம். இவர் படங்களில் இரண்டாவது ஹீரோ போல காமெடி கேரக்டர்களில் கலக்கியவர் சந்தானம். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் காமெடிக்கு இப்போதும் இருக்கிறது மவுசு.

’கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை ராஜேஷ் இயக்கும்போது, காமெடி கேரக்டரில் நடிக்க சந்தானத்தை கேட்டார். அவர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பதால் காமெடி கேரக்டரில் நடிப்பதில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அவருக்கு காமெடி கதை ஒன்றை சொன்னார் ராஜேஷ்.எம். கதைப் பிடித்திருந்ததால் சந்தானமும் ஓகே சொல்ல, இப்போது படம் ரெடி!

‘ஆகஸ்டில் ஷூட்டிங் தொடங்க பேசிக்கொண்டிருக்கிறோம். இதுவரை நான் இயக்கிய படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். எனக்கும் சந்தானத்துக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. சந்தானத்துக்கும் இது புதுமையான படமாக இருக்கும்’ என்றார் ராஜேஷ்.எம்.

ராஜேஷ் படங்களில் டாஸ்மாக் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். இதில் அப்படி ஏதும் இருக்காது என்கிறது படக்குழு. நெசமாவா பாஸ்!