சினிமா

'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது

'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது

Rasus

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ' சக்க போடு போடு ராஜா' திரைப்படம் உலகெங்கும் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகுகிறது.

ஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ' சக்க போடு போடு ராஜா'. வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. இத் தகவலை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையையொட்டி படம் வெளியாவதால் படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, படத்தின் பாடல்களை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.