சினிமா

18 ஆம் நூற்றாண்டு மன்னன் கதாபாத்திரத்தில் சந்தானம் - என்ன படம் தெரியுமா?

webteam

18 ஆம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்த ராஜ சிம்ஹா எனும் மன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.

ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமாராங் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்.கண்ணன். இவர் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்திருக்கும் படம் பிஸ்கோத். இப்படத்தில் நடிகர் சந்தானம் 18 நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ சிம்ஹா எனும் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் 30 நிமிடங்கள் வரும் மன்னன் கதாபாத்திரத்திற்காக மாதக்கணக்கில் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டதாம் படக்குழு. மன்னன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரியும், சுவாதி முப்பாலாவும் நடித்துள்ளனர். துணை கதாபாத்திரங்களாக மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ், லொள்ளு சபா மனோகர் ஆகியோருடன் 1000 துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.

இந்த மன்னன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக கலை இயக்குனர் ராஜா குமார் கைவண்ணத்தில் ராமோஜி படப்பிடிப்புத் தளத்தில் பிரமாண்ட அரண்மனை அமைத்து காட்சிகளை எடுத்துள்ளார்கள்.

இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும் போது “ கிட்டத்தட்ட படம் நிறைவடைந்து விட்டது. சினிமா பணிகளுக்கு அனுமதி அளித்தவுடன் மீதமுள்ள பணிகளை தொடர வேண்டும். சந்தானம், அவருக்கான டப்பிங் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும் இப்படம் கொரோனாவால் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ள மன அழுத்ததைப் போக்கும் என நம்புகிறேன்.” என்றார்.