சினிமா

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ : அதிகாரபூர்வ அறிவிப்பு

sharpana

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிக்கிலோனா' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்திற்குப் பிறகு நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் 'டிக்கிலோனா'. இந்தப்படத்தில் மூன்று விதமான தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார் என்றும் காலத்தை கடந்து செல்லும் கதைக்களம் என்றும் சொல்லப்படுகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனைனா, ஷிரின் ஹீரோயின்களாக நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், ’டிக்கிலோனா’ திரைப்படம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று நடிகர் சந்தானம் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.