பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், தற்போது நடித்துள்ள படம் 'சங்கராந்திகி வஸ்துன்னம்'. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ், உபேந்திரா லிமாயி, சாய்குமார், நரேஷ், வி.டி.வி கணேஷ் மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசராலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த நிலையில், வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் 4 நாட்களில் ரூ. 131 கோடி வசூல் செய்துள்ளது.
தவிர, வார இறுதியான இன்று மற்றும் நாளை படத்தின் டிக்கெட் விற்பனை அமோகமாக விற்பனையாகி இருப்பதால், இன்றுக்குள் ரூ.150 கோடி மைல்கல்லை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடஅமெரிக்காவில் மட்டும், இப்படம் வேகமாக டாலர் 1.5 மில்லியனை நெருங்கி வருகிறது. ’சங்கராந்திகி வஸ்துன்னம்’ ஏற்கெனவே ஏறக்குறைய அனைத்து சென்டர்களிலும் பிரேக்வென் சாதனையை முறியடித்துள்ளது.
இப்படம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறப்படுகிறது. இப்படம், அடுத்த மாதம் நடுப்பகுதியில் OTTஇல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஜி 5 படத்தின் OTT உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், மேலும் அப்படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.