சினிமா

வீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா

வீடியோ, படங்களில் இருப்பது நானில்லை: சஞ்சிதா

webteam

சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தன்னுடையது அல்ல என நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியுள்ளார்.

சுசித்ராவின் டிவிட்டர் கணக்கில், சூது கவ்வும் திரைப்பட நாயகி சஞ்சிதா ஷெட்டியின் வீடியோ ஒன்று வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி, சமூக வலைதளங்களில் தன் பெயரில் வீடியோ மற்றும் படங்கள் பரவி வருவதாகவும் அதில் இருப்பது தான் இல்லை எனவும் டிவிட்டர் மூலம் பதில் அளித்திருக்கிறார். ரசிகர்கள் தொடர்ந்து தமக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.