சினிமா

ஒரே சமயத்தில் 3 பெண்களைக் காதலித்தேன்: சஞ்சய் தத் ஓபன் டாக்

ஒரே சமயத்தில் 3 பெண்களைக் காதலித்தேன்: சஞ்சய் தத் ஓபன் டாக்

webteam

மூன்று பெண்களை ஒரே சமயத்தில் காதலித்ததாக சஞ்சய் தத் கூறியிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், போதைப் பொருள் விவகாரம், ஆயுதம், பெண்கள் பிரச்னை என்று அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கியவர். சிறைவரை சென்று வந்தவர். பல நாட்களுக்குப் பிறகு அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். டெல்லியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “ஒரு காலத்தில் நான் ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலித்தேன். அந்த விஷயம் ஒருவருக்கு ஒருவர் தெரிந்துவிடாமல் சாமர்த்தியமாக பார்த்து கொண்டேன். இந்த விஷயத்தில் யாரிடமும் தெரியாமல் தப்பிப்பது பெரிய புத்திசாலிதனம். கல்லூரியில் படிக்கும் காலத்தில்தான் எனக்கு போதைப்பொருள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து விடுபட எனக்குப் பத்தாண்டுகள் தேவைப்பட்டன. தயவு செய்து யாரும் போதைக்கு அடிமையாகிவிடாதீர்கள். என் மகன் என்னைபோல ஆகிவிடக் கூடாது என்று பயமாக உள்ளது. என்னால் என் தந்தை பட்ட கஷ்டங்களை நான் பட விரும்பவில்லை. என் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்று தந்து வளர்க்கிறேன்” என்று உருக்கமாக பேசினார்.