சினிமா

நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு?

நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு?

JustinDurai

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, டாக்டர்கள் ஆர்.டி., பி.சி.ஆர். உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டனர். இதில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 

சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாக சினிமா ஊடகவியலாளர் கோமல் நத்தா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், 'ஹாய் நண்பர்களே, நான் சில மருத்துவ சிகிச்சைக்காக பணியில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது நலம் விரும்பிகள் கவலைப்படவோ தேவையில்லாமல் சிந்திக்கவோ வேண்டாம். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன், நான் விரைவில் நலமுடன் திரும்புவேன்' என அந்த பதிவில் கூறியிருந்தார். 

சஞ்சய் தத் விரைவில் குணமடைந்து நாடு திரும்ப வேண்டும் என அவரது குடும்ப நண்பர்கள், திரையுலக நலம் விரும்பிகள் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளனர்.