சினிமா

சங்கமித்ரா நாயகி யார்..? திணறும் படக்குழு...!

சங்கமித்ரா நாயகி யார்..? திணறும் படக்குழு...!

webteam


பெரும் பொருட்செலவில் உருவாக இருக்கும் சங்கமித்ரா  படக்குழு  பட அறிவிப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கான்ஸ் பட விழாவில் தொடங்கி வைத்து அமர்க்களப்படுத்தியது.

ஓபனிங்க் பிரம்மாண்டமாக இருந்த போதும், அடுத்த சில நாட்களில் அப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருந்த நடிகை ஸ்ருதிஹாசன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்படத்தில் யார் நாயகியாக ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பல நடிகைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பல ஆண்டுகள் கொண்ட ப்ராஜெக்ட் என்பதால் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது சங்கமித்ரா பத்தின் ப்ரீ- ப்ரொடக்சன் வேலைகள் ஹைதராபத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹன்சிகாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சுந்தர்.சி இயக்கும் இந்தப்படத்தை 400 கோடி ரூபாய் செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.