சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ படத்தின் இரண்டு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவ்விரண்டு போஸ்டர்களுக்குமே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜெயம் ரவி கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டரை படக்குழு வெளியிடவில்லை.
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.