’சண்டக்கோழி-2’ படத்துக்காக பிரமாண்ட செட் ஒன்றை உருவாக்கி வருவதாக இயக்குனர் லிங்குசாமி கூறினார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் ’சண்டக்கோழி’. 2005-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், இப்போது உருவாகிறது. விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது.
இதுபற்றி லிங்குசாமி கூறும்போது, ’படத்துக்காக பிரமாண்ட செட் உருவாக்கப்படுகிறது. திருவிழா காட்சிக்கான செட் அது. அதில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜனவரியில் படம் ரிலீஸ் ஆகும்’ என்றார்.