திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதிக்கு வந்த நடிகை சமந்தா இன்று அதிகாலை சுப்பரபாதம் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
தெலுங்கில் பிரபல திரைப்பட நடிகர் நாகார்ஜூனா மகனும் நடிகருமான நாக சைத்தான்யாவுடன் சமந்தாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.