சினிமா

படப்பிடிப்புக்குத் திரும்பினார் சமந்தா

படப்பிடிப்புக்குத் திரும்பினார் சமந்தா

webteam

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே படப்பிடிப்புக்குத் திரும்பிவிட்டார் நடிகை சமந்தா. 

தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் கடந்த 6-ம் தேதி கோவாவில் நடைபெற்றது. முதல் நாள் இந்து முறைப்படியும் மறுநாள் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா கூறியிருந்தார். அதன்படி திருமணம் முடிந்த கையோடு, ’ராஜு காரி காதி 2’ என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். நாளை முதல் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, ’நடிகையர் திலகம்’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.