சினிமா

ஐதராபாத்தில் தொடங்கியது, ’96’ தெலுங்கு ரீமேக்!

ஐதராபாத்தில் தொடங்கியது, ’96’ தெலுங்கு ரீமேக்!

webteam

’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. 

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் '96'. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். இவர்களது கேரக்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்நிலையில், பிரேம் குமார் இயக்கிய இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப் பட்டது. அதில் த்ரிஷா கேரக்டரில் பாவனா, விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தனர்.

இப்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்த் மற்றும் த்ரிஷா கேரக்டரில் சமந் தா நடிக்கின்றனர். தமிழில் 96 படத்தை இயக்கிய, பிரேம் குமார் தெலுங்கிலும் இயக்குகிறார். தெலுங்குக்காகக் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தொடங்கியுள்ளது. அதில் சமந்தா நடிக்கும் காட்சிகள், சமூக வலைத்தலங்களில் வெளியாகியுள்ளன.