பரபரப்பை ஏற்படுத்திய சுசி லீக்ஸ் கதையில் சமந்தா நடித்துள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, நடிகர் தனுஷ் பற்றி தனது ட்விட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் சில விமர்சனங்களை பதிவிட்டார். பிறகு தன் ட்விட்டரை யாரோ 'ஹேக்' செய்துவிட்டார்கள் என்றார். தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதில் தனுஷ், த்ரிஷா, ராணா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாடகி சின்மயி போன்றவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சில ஆபாச படங்களும் இருந்தன. பின்னர் தன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று மீண்டும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் இதே கதையை போன்று ’ராஜூ காரி காதி 2’ என்ற தெலுங்கு படம் உருவாகி இருக்கிறது. இதில் சமந்தா பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். அந்தரங்க வீடியோவால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய கதையான இதில், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரார் காமெடி படமான இந்த படத்தை பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார். ஓம்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.