சினிமா

‘சீமராஜா’ சமந்தா ஷூட்டிங் ஓவர்

webteam

‘சீமராஜா’  ஷூட்டிங்கை முடித்து சமந்தா விடைபெற்று சென்றார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் திரைப்படம் ‘சீமராஜா’. இந்தப் படத்தில் சிவாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து வருகிறார். ஒரு கிராமத்து பெண் தோற்றத்தில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்படுள்ளது. தேனி, கேரளா உட்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்து அவரது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை பதிவிட்டுள்ளார். அதில், “இந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற ஷூட்டிங் மிக அழகாகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவடைந்துள்ளது. மிக அருமையான படக்குழு. அதற்காக இந்த டீமிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பாக கொண்டுப்போன பொன்ராமிற்கும் நன்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.