தமிழ் சினிமா நடிகைகள் தற்காப்புக் கலையில் ஆர்வம் காட்டி வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
பாகுபலி படத்துக்காக நடிகை, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் வாள் சண்டைக் கற்றனர். அடுத்து ’நாம் ஷபானா’ என்ற இந்தி படத்துக்காக நடிகை டாப்ஸி, இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு கலையான கிரவ்மஹா, ஜப்பானிய நாட்டின் தற்காப்பு கலை அய்கிடோ போன்றவற்றைக் கற்றார். இப்போது நடிகை சமந்தா சிலம்பம் கற்று வருகிறார். அவர் கம்பு சுற்றும் வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்காக சிலம்பம் கற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சமந்தா. இதே போல ஸ்ருதிஹாசன், சங்கமித்ரா படத்துக்காக வாள் சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே சில தற்காப்புக் கலைகளை கற்று வைத்திருக்கிறார் ஸ்ருதி. இதற்கிடையே நடிகை நீது சந்திரா, ‘டேக்குவாண்டோ’ என்ற சண்டைக் கலையில் நான்கு, ‘பிளாக்பெல்ட்’ வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.