சினிமா

சமந்தா நடிக்கும் கன்னட ரீமேக் தமிழ் படம்

webteam

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா கன்னட ரீமேக் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

சமந்தா தற்சமயம் சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் கிராம கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளார். இதனிடையே  கன்னட படமான யு டர்ன் படம் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. யு டர்ன் படத்தில் பவன் குமார் நடித்திருந்தார். 

அந்தப் படம் திரை விமர்சகர் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. பவன் நடிப்பில் வந்த லூசியா தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருந்து. அதில் சித்தார்த் நடித்திருந்தார். லூரியா கன்னடத்தில் க்ரெளட் ஃபண்ட் மூலம் மிக குறைந்த முதலீட்டில் தயாரான திரைப்படம். அதன் வித்தியாசமான திரைக்கதை பலரது கவனத்தை ஈர்த்தது. அதேபோல யுடர்ன் படமும் தமிழில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் சமந்தா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.