சினிமா

5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளிய சல்மான்கான்

5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளிய சல்மான்கான்

webteam

'டைகர் ஜிந்தா ஹே' படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக நடிகர் சல்மான்கான் 5 ஆயிரம் குண்டுகளை சுட்டுத் தள்ளியதாக தகவல் வெளிவந்துள்ளது.

பாலிவுட் ஸ்டார் சல்மான்கான் அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் டைகர் ஜிந்தா ஹே. இதில் சல்மான் ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படத்தில், சல்மான் பயன்படுத்தி உள்ள எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிதான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது. 
இது போன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல.  MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல் 30 கிலோ இருக்கும். இதனுடன் தோட்டாக்களை கொண்ட மேகஸீன்களை இணைக்கும் போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.

படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இந்தக் காட்சி பற்றி, "ஆக்ஷன் படத்திற்காகவே உடலை மெருக்கேற்றி வைத்திருக்கும் சிறந்த நடிகர் சல்மான்கான். அவரை  ஆக்ஷன் காட்சிகளில் காண்பிக்கும் போது அவருடைய உருவத்திற்கும் உழைப்பிற்கும் பலமான காட்சியான MG 42  ஃபைட் காட்சிகள் இருந்தன" என்றார்.
மேலும், "படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்த சண்டைக் காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இக்காட்சிகள் தொடர்ந்து 3 நாள்களுக்கு படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்த சீன் இருந்தது. இந்தக் காட்சிகள் மிக வெப்பமான இடத்தில் படம் பிடிக்கப்பட்டன. எனவே கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகிவிடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில்  படமாக்கினோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். சல்மான்கான், கேத்ரினா கைஃப் மீண்டும் இனணயும் இந்த டைகர் ஜிந்தா ஹே திரைப்படம் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.