சினிமா

தனது பாதுகாவலரை அறைந்த சல்மான் கான்: வைரலாகும் வீடியோ!

தனது பாதுகாவலரை அறைந்த சல்மான் கான்: வைரலாகும் வீடியோ!

webteam

தனது பாதுகாவலரை, ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் சல்மான் கான், அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சல்மான் கான், கேத்ரினா கைப், தபு உட்பட பலர் நடித்துள்ள படம் ’பாரத்’. அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்தப் படம், நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆன, மும்பை தியேட்டர் ஒன்றுக்கு நேற்றுமாலை சல்மான் கான் வந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், வெளியே வந்தார். 

சல்மான் கானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வெளியே திரண்டிருந்தனர். அவர்கள் சல்மானை புகைப்படம், வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்தினர். சில ரசிகர்கள் சல்மான் கானின் அருகில் செல்ல முயன்றனர். அவரது பாதுகாவலர்கள் தடுத்தனர். சில சிறுவர்கள் மற்றும் பெண்கள் அவர் அருகே வர முயன்றனர். சிலர் அவரிடம் ஏதோ கேட்டனர். அவர்களுக்கு சல்மான் பதில் சொன்னார். அப்போது, பாதுகாவலர் ஒருவர், ரசிகர்களை பிடித்துத் தள்ளினார். இதனால் ஆவேசமடைந்த சல்மான் கான், அந்த பாதுகாவலர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதை எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. பாதுகாவலர் தனது வேலையைதான் செய்தார். அவரை எப்படி, சல்மான் கான் அடிக்கலாம் என்று பலர் அவர் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.