சினிமா

சல்மானுடன் மோதும் ரன்பீர்

சல்மானுடன் மோதும் ரன்பீர்

webteam

கிறுஸ்துமஸ் தினத்தில் ரன்பீர் கபூர் மற்றும் சல்மான்கான் படங்கள் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான்கான், ரன்பீர் கபூர் இருவரும் இந்த வருடம் கிறுஸ்துமஸ் தினத்தில் தங்களது படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது பாலிவுட்டில் படம் துவங்கும் போதே அதன் ரீலிஸ் தேதி அறிவிப்பது ஃபேஷனாகி விட்டது. ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் எல்லாம் சொன்ன தேதியில் ரிலீசும் ஆகி இருக்கின்றன. தற்போது சல்மான் கான் ‘டைகர் ஜிந்தா ஹை” என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘சுல்தான்’ இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்குகிறார். இதே போன்று ரன்பீர் கபூர் , சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை 3 இடியட்ஸ், பிகே படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். இந்த இரண்டு படங்கள் தான் இந்த வருடம் கிறுஸ்துமஸ் தினத்தில் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.