’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்குப் பிரபுதேவாவுடன் நடிகர்கள் சல்மான் கான், சுதீப் ஆகியோர் ஆடும் டான்ஸ் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
சல்மான்கான், சோனாக்ஷி சின்கா, டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உட்பட பலர் நடித்திருந்த இந்தி படம், ‘தபாங்’. அபினவ் காஷ்யப் இயக்கி இருந்த இந்தப் படத்தை சல்மான் சகோதரர், அர்பாஸ் கான் தயாரித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்திருந்தது. இதில் சல்புல் பாண்டே என்ற போலீஸ் இஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தி ருந்தார் சல்மான். இது, தமிழில் சிம்பு நடிக்க, ’ஒஸ்தி’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. பெரிய வரவேற்பை பெறவில்லை.
’தபாங்’ படத்தின் இரண்டாம் பாகம் 2012-ல் வெளியானது. சல்மான் சகோதாரர் அர்பாஸ் கான் தயாரித்து, இயக்கியிருந்தார். ஹிட்டானது.
இதன் மூன்றாம் பாகம் இப்போது உருவாகிறது. அர்பாஸ் கான் தயாரிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். சல்மான்கான் நடித்த ’வான்டட்’ படத்தை இவர் ஏற்கனவே இயக்கி இருந்தார். சோனாக்ஷி ஹீரோயின். சல்மான் கானுக்கு வில்லனாக கன்னட ஹீரோ சுதீப், நடிக்கிறார்.
இந்நிலையில் சல்மான்கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’காதல்’ படத்தி ல் இடம்பெற்ற ’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன், சல்மான் கான், சுதீப், தயாரிப்பாளர் சஜீத் நடியத்வாலா ஆகி யோர் நடனமாடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
’காதலன்’ படம் இந்தியில் ’ஹம்சே ஹை முக்காப்லா’ (Humse Hai Muqabala) என்ற பெயரில் டப் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற ’ஊர்வசி ஊர்வசி’ உட்பட அனைத்து பாடல்களும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது