பிரேமம் புகழ் சாய் பல்லவி தெலுங்கு உலகில் தனது முதல்படம் வெளியாகும் முன்னரே இரண்டாவது படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளளார்.
பிரேமம் என்கிற ஒன்றை படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. மலையாள நடிகையான அவர் நம் திரையுலகில் கால் பதிக்க மாட்டாரா என கோலிவுட் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தெலுங்கு உலகில் "பிடா" என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் இன்னும் ரீலிஸ் ஆகாத நிலையில் தெலுங்கில் தனது இரண்டாவது படத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் பெயர் "எம்சிஏ". ஞானி கதாநாயகனான நடிக்கும் இப்படத்தை ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் ஞானி மாணவனான நடிப்பதாக தெரிகிறது.
ஏஎல் விஜய் இயக்கத்தில் "கரு" என்கிற கோலிவுட் படத்திலும் சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.