சினிமா

தமிழ் ரசிகர்களால்தான் நான் இங்கு நிற்கிறேன்: சாய் பல்லவி ஹேப்பி

webteam

தமிழ் ரசிகர்களால்தான் நான் இந்த மேடையில் நிற்கிறேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். 

மலையாள படம் ‘பிரேமம்’ மூலம் வைரல் ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தவர் சாய் பல்லவி. அவரை எப்படியாவது தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் பலர் குறியாக நின்றார்கள். இறுதியில் அந்த அறிமுகம் இயக்குநர் ஏ.எல்.விஜய் மூலம் நடந்தேறியிருக்கிறது. அவர் இயக்கியுள்ள ‘கரு’ படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. 

அவ்விழாவில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ நான் நடிக்க வந்ததே தற்செயலாதான் நடந்துச்சு. இந்த மாதிரி தற்செயலா நடிக்க வந்த எனக்கு இவ்வளவு அன்பு இவ்வளவு ஆதரவு கொடுத்தது தமிழ்நாடுதான். ‘பிரேமம்’ ரிலீஸுக்கு பிறகு அதிக ஆதரவு தமிழ்நாட்டுல இருந்துதான் கிடைச்சது. இந்தத் தமிழ் ஆடியன்ஸ்னாலதான் நான் இப்போது இந்த மேடையில இருக்கேன். பல நாளா தமிழ் பட மேடையில வந்து நின்று நன்றி சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அதற்காக உங்களுக்கு என்னோட நன்றி. பெரிய ஆதரவு கிடைச்ச பின்னாடிதான் பொறுப்புணர்வு அதிகமாகிச்சு. ‘பிரேமம்’ வெளியான பின்னாடி ‘எப்ப தமிழ்ப் படம் பண்ண போறீங்க?’னு பலர் கேட்டாங்க. அதற்கு அப்ப என்கிட்ட பதிலே இல்ல. விஜய் என்கிட்ட வந்து கதை சொல்லும் போது என மனசுல ஓடிக்கிட்டு இருந்தது ஒண்ணுதான். இவ்வளவு நாளா இந்தக் கதைக்காகதான் நாம காத்துக்கிட்டிருந்தோம். உடனே அவரோட விவாதிச்சேன். வேலைகளை ஆரம்பிச்சோம். ரொம்ப உணர்ச்சிகரமான படம் இது.” என்று கூறினார்.