என்.ஜி.கே படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, நடிகை சாய்ப் பல்லவி, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சாய் பல்லவி, “என்.ஜி.கே சூட்டிங் சென்றபோது முதலில் நான் பயந்து கொண்டு இருந்தேன். எனக்கு குறைந்த அனுபவம் தான். அதைவைத்து பார்க்கும்போது வீட்டிலிருந்து வசனங்களை கற்று கொண்டு சென்றிருக்கிறேன். நான் யோசிப்பதை காட்டிலும் வேற லெவலில் இயக்குநர் செல்வா யோசிக்கிறார்.
என் அம்மாவிடம் சொன்னேன். நான் நடிகை என்று என்னை நானே ஏமாத்திட்டு இருந்துருக்கேன். ஒரு டேக் அதிகமானால் கூட வருத்தப்படுவேன். நடிகர் சூர்யா தான் எனக்கு ஆறுதல் கூறுவார். அதற்காக அவருக்கு நன்றி. படப்பிடிப்பு இன்னும் சிலநாட்கள் நீடித்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அதற்கு காரணம் இன்னும் நடிப்பை நன்றாக கற்று கொள்ள வேண்டும் என்பற்காகவே.
நான் வேற சாய்பல்லவியாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் செல்வாதான். அவர் என்னைவிட நன்றாக நடிப்பார் என்று தோன்றும். நான் தப்பு பண்ணுனாதான் தப்பா ஆகிருக்கே தவிர என்னை சுற்றி எதுவும் தப்பா ஆனதில்லை. அன்புக்கு ரொம்ப நன்றி” எனப் பேசினார்.