சினிமா

சினிமாவிற்காக டாக்டர் தொழிலைவிட்ட பிரேமம் நாயகி

சினிமாவிற்காக டாக்டர் தொழிலைவிட்ட பிரேமம் நாயகி

webteam

சினிமாவில் பிசியாகி உள்ளதால் தற்சமயம் டாக்டர் தொழிலை விட்டுவிட்டேன் என்று ‘பிரேமம்’ நாயகி கூறியுள்ளார்.

ஒரே படம்; ஓஹோ என்று ஓவர் நைட்டில் புகழின் உச்சுக்கு சென்றவர் ‘பிரேமம்’ சாய் பல்லவி. இவரை தமிழில் நடிக்க வைக்க பல போட்டிகள் நடந்தன. இறுதியில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடித்து முடித்தார். அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தனுஷின் ‘மாரி2’, சூர்யாவுக்கு ஜோடியாக ‘என்.ஜி.கே’ படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரை ஒப்பந்தம் செய்ய கடும் போட்டி நிலவுகிறது. இவர் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பில் இருந்ததாலேயே சினிமாவில் இதுவரை கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். படிப்பை முடித்துவிட்டு மருத்தவ வாழ்க்கையை தொடங்குவார் என எதிர்பார்த்த வேளையில் சினிமா வாழ்க்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தார்.

இந்நிலையில் அவர் தனது மருத்து வாழ்க்கை குறித்து, “சின்ன வயதில் இருந்து  டான்ஸ் கற்றுக்கொண்டேன். 2008ல் வெளியான ‘தாம்தூம்’ படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்து இருந்தேன். ‘கஸ்தூரிமான்’ படத்திலும் மீரா ஜாஸ்மின் தோழியாக நடித்தேன். அதற்கு பிறகு எனது அப்பா ‘சினிமா நிரந்தர தொழில் இல்லை. ஹீரோயினாக 6 ஆண்டுகள் மட்டுமே சினிமா இண்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க முடியும். அதன் பிறகு ஓரம் கட்டிவிடுவார்கள்’ என்றார். உனக்கு படிப்புதான் முக்கியம் என கூறி ஜார்ஜியாவுக்கு டாக்டருக்கு படிக்க அனுப்பினார். அங்கு படித்துக் கொண்டு இருந்தபோது தான் ‘பிரேமம்’வாய்ப்பு வந்தது. படிப்புக்கு பாதிப்பு வராமல் விடுமுறையில் மட்டும் நடிக்கும்படி வீட்டில் சொன்னார்கள். அந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். முழு நேர நடிகையாகியதால் டாக்டர் வேலையை விட்டுவிட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகில் சவாரி செய்யக் கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆகவே எனது பெயருக்கு பின்னால் கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தை சேர்த்துக்கொள்ளவில்லை.” என கூறியுள்ளார்.