சினிமா

தனுஷூக்கு ஜோடியானார் சாய் பல்லவி

தனுஷூக்கு ஜோடியானார் சாய் பல்லவி

webteam

தனுஷ் நடிக்கும் மாரி 2வில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. இதற்கான அறிவிப்பை தனுஷ் நிறுவனமான ஒண்டர்பார் இன்று அறிவித்துள்ளது. 

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் சாய் பல்லவி. இந்தப் படத்தில் இவரது நடிப்பை கண்டு அசந்து போன திரை ரசிகர்கள் ’மலர்’ மீது மயக்கமாகி திரிந்தனர். அவரது அபரிமிதமான புகழை நினைத்து வியந்து போன தமிழ் சினிமா உலகம் அவரை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று போட்டி போட்டது. ஆனால் வந்த அத்தனை வாய்ப்புகளையும் நிராகரித்தார் சாய் பல்லவி. 

இதற்கிடையில் அவர் தெலுங்குக்கு போனார். அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்சமயம் தனுஷ் நடிக்க உள்ள மாரி 2 வில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்காக தனியாக ஒரு அறிமுக விளம்பரத்தை கொடுத்துள்ளது ஒண்டர்பார் நிறுவனம். இதுவரை நாயகி ஒருவருக்கு இதைபோல விளம்பரம் தமிழ் சினிமாவில் வெளி வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.