சினிமா

நான் சாமி இல்ல... பூதம் ‘சாமி ஸ்கொயரில்’ மிரட்டும் விக்ரம் !

நான் சாமி இல்ல... பூதம் ‘சாமி ஸ்கொயரில்’ மிரட்டும் விக்ரம் !

webteam

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’  படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் `சாமி' படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.  ‘சாமி ஸ்கொயர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில், விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். அது மட்டுமின்றி பிரபு, சூரி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியானது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த டிரைலர் வழக்கமான ஹரி படத்தை போல விறுவிறுப்பாக நகர்கிறது. டிரைலர் முழுவதுமே மிரட்டலாக விக்ரம் பேசும் வசனங்கள் சாமி முதல் பாகத்தை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக  ‘நான் தாய் வைத்துல பொறக்கல... பேய் வைத்துல பொறந்தேன். நான் சாமி இல்ல... பூதம்’ என்ற வசனங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.