சினிமா

எஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் திடீர் இட மாற்றம்

எஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் திடீர் இட மாற்றம்

Rasus

சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எஸ்.வி.சேகரின் நாடகம் இடமாற்றப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் 23ஆம் தேதி நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் அதே எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை 10.30 மணிக்கு தன்னுடைய ‘அல்வா’ நாடகம் வெளியாகும் என நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்தார்.

ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியியில் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட எஸ்.வி.சேகரின் நாடகமும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தியாகராயநகர் சர் பிட்டி தியாகராயா அரங்கில் இன்று மாலை 7 மணிக்கு தனது நாடகம் வெளியாகும் என எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார். அத்துடன் நாடகத்தின் பெயர் ‘அல்வா’விற்கு பதில் ‘காமெடி தர்பார்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.